1985ல் வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியாவை மிரட்டிய யு.கே.
சன்டிகர்: வெஸ்ட்லேண்ட் டபுள்யூ30 ரக ஹெலிகாப்டர்களை வாங்குமாறு இந்தியாவுக்கு இங்கிலாந்து அழுத்தம் கொடுத்தது என்று அண்மையில் வெளியான சில இங்கிலாந்து கேபினட் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையில் 1987ம் ஆண்டு வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 60 மில்லியன் பவுண்டுக்கு 21 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டது. பின்னர் அந்த ஹெலிகாப்டர்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாகக் கூறி அவற்றை இந்தியா 2000ம் ஆண்டு இங்கிலாந்துக்கு 9 லட்சம் பவுண்டுக்கு விற்பனை செய்தது.

இந்நிலையில் இது குறித்த இங்கிலாந்து கேபினட்டின் சில முக்கிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவை வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்குமாறு இங்கிலாந்து மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. 1985ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் மார்கரேட் தாட்சர் மற்றும் அவரது சகாக்கள் ராஜீவ் காந்தி மற்றும் அவரது சகாக்களை தொடர்பு கொண்டு வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்குமாறு வலியுறுத்தியும், மிரட்டியும் உள்ளது அந்த ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
தாட்சர் இந்தியா வந்தபோது ராஜீவ் காந்தியை சந்தித்துள்ளார். அப்போது வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லாததை தாட்சர் புரிந்து கொண்டுள்ளார். இருப்பினும் ஹெலிகாப்டரை வாங்குமாறு ராஜீவ் காந்தி வலியுறுத்தப்பட்டுள்ளார்.
1985ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடந்த இங்கிலாந்து கேபினட் கூட்டத்தில் பேசப்பட்டுள்ள விவரம் அந்த ஆவணங்களில் உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, இங்கிலாந்தின் வெளிநாட்டு அபிவிருத்தி துறை அமைச்சர் ரைசன் ஏப்ரல் 24ம் தேதி ராஜீவ் காந்தியை சந்தித்து பேசினார். இந்தியா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்காவிட்டால் இங்கிலாந்து இந்தியாவுக்கு அளிக்கும் நிதித் திட்டம் தோல்வி அடையும் என்று தெரிவித்தார். இங்கிலாந்து இந்தியாவுக்கு அளித்த நிதி முழுமையாக பயன்படுத்தாமல் இருந்தது. அதனால் அந்த பணத்தை வைத்து ஹெலிகாப்டர் வாங்குமாறு வலியுறுத்தப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications