For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீரில் நிலம் உள்ளிட்டவற்றை வாங்கலாம் என்ற சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தேசிய துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா சொல்லும்போது, "ஜம்மு காஷ்மீரை "விற்பனைக்கு" விட்டுள்ளது மத்திய அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம். மக்களின் விருப்பத்திற்கு உருவாக்கப்பட்ட சட்டம் இவை" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நேற்று ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.. இந்த சட்டம் மூலம், இந்தியக் குடியுரிமை உடையவர்கள் லடாக், ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க முடியும், ஆனால் விவசாய நிலங்களை மட்டும் வாங்க இயலாது. அதாவது குறைந்த அளவு நிலங்களை வைத்துள்ள நில உரிமையாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்

 Unacceptable amendments to the land ownership laws of J&K, says, Omar abdullah

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும், "இந்த சட்டம் மூலம் விவசாய நிலங்கள் மற்ற பயன்பாடுகளுக்கு மாற்ற முடியாது... அதேநேரம், கல்வி நிலையங்கள், சுகாதார அமைப்புகளை விவசாய நிலங்களில் ஏற்படுத்த தடை இல்லை. அதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன், இதை அனைத்து வகையிலும் எதிர்த்துப் போராட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தேசிய துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா கூறுகையில், ஜம்மு காஷ்மீரை "விற்பனைக்கு" விட்டுள்ளது மத்திய அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

"இங்கிலீஷில்தான் பேசுவியா.. தமிழ் வராதா".. ஒருமையில் திட்டிய டிஎஸ்பி.. விஷத்தை குடித்த திமுக டாக்டர்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் அரசுகள் பிறப்பித்துள்ள புதிய சட்ட அறிவிப்புகள் கடும் கண்டனத்துக்குரியது. அதை தீவிரமாக எதிர்க்கிறோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம். மக்களின் விருப்பத்திற்கு உருவாக்கப்பட்ட சட்டம் இவை என்றார் அவர்.

இந்த போராட்ட அறிவிப்புக்கு ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி தலைவர் சையத் முகம்மது அல்டாப் புகாரியும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநிலஅந்தஸ்து தர வேண்டும் என்றும் அல்டாப் புகாரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாடு முழுவதும் ஆதரவு திரட்ட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
Unacceptable amendments to the land ownership laws of J&K, says, Omar abdullah
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X