ம.பி பத்திரிக்கையாளர் அக்ஷய் சிங் இறப்பு குறித்து விசாரணை தேவை - யுனெஸ்கோ வலியுறுத்தல்
நியூயார்க்: மத்திய பிரதேச பத்திரிகையாளர் மரணம் குறித்து விசாரணை நடத்த ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வியாபம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் அக்ஷய் சிங் மர்மமாக இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பான சூழ்நிலைகளில் பணி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பக்கூடாது என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.
பத்திரிகையாளர் அக்ஷய் சிங்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள யுனெஸ்கோ டைரக்டர் ஜெனரல் ஐரினா போகோவா, இந்த மரணம் பற்றி அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார். அக்ஷய் சிங் மரணம் குறித்து சி.பி.ஐ தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications