75வது சுதந்திர தினத்திற்குள் அனைவருக்கும் சொந்த வீடு: பட்ஜெட்டில் அருண் ஜெட்லி
2022 ஆம்ஆண்டு இந்தியா தனது 75வது சுதந்திரதினத்தை கொண்டாட உள்ளது. அதற்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தவீடு கிடைக்க வழி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இதுவாகும். அதில் அறிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்.
பொருளாதார மேம்பாடு
மக்கள் ஊழல், முறைகேடுகளை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர் என்று கூறிய அருண் ஜெட்லி, செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் நலனுக்காகவே என்று தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி
ரூபாய் மதிப்பு 6.4% அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களும் சம பங்கு வகிக்கின்றன.பொருளாதார மேம்பாட்டுக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 2015-16ல் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 8-8.5% ஆக இருக்கும்.
பணவீக்க விகிதம் 6%க்கும் குறைவாக இருப்பதில் உறுதியான நடவடிக்கை
மத்திய அரசின் சாதனைகள்
மத்திய அரசின் 3 சாதனைகள் ஜன்தன் யோஜனா, நிலக்கரி சுரங்க ஏலம், தூய்மை திட்டம். ஜன் தன் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 12.5 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள மாநிலங்கள் பயனடையும் வகையில் ஏல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-15ல் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும். 50 லட்சம் கழிப்பறைகள் ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டன.
அரசின் முன் உள்ள சவால்கள்
உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் இதை ஈடுகட்டவே வகுக்கப்பட்டுள்ளது. அரசின் முன் 5 பிரதான சவால்கள் முன்னுள்ளன. 80 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.
10% பொருளாதார வளர்ச்சியை விரைவில் எட்டுவோம்.
2022க்குள் இலக்கு நிர்ணயம்
2022 ஆம்ஆண்டு இந்தியா தனது 75வது சுதந்திரதினத்தை கொண்டாட உள்ளது. அதற்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தவீடு கிடைக்க வழி செய்யப்படும். கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் 4 கோடி வீடுகள் கட்டப்படும். 2020க்குள் கிராமங்களுக்கு மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications