2016-17ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் ஜெட்லி! வருமான வரி விலக்கில் மாற்றமில்லை
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடவில்லை. அதேநேரம், வீட்டு வாடகைக்கான வரி விலக்கு மதிப்பை ஜெட்லி உயர்த்தியுள்ளார். இது மாத சம்பளக்காரர்களுக்கு ஓரளவுக்கு உதவும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் மதியம் 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கிராமப்புற வளர்ச்சி, விவசாய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் பல அறிவிப்புகல் அதில் இடம் பெற்றன.
தற்போது தனிநபருக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உள்ளது. விலைவாசி உயர்ந்து செலவுகள் அதிகரித்து இருப்பதால் இந்த வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாதச்சம்பளம் பெறுவோர் மத்தியில் உள்ளது.
எனவே இதுபற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு பெரும்பான்மை மக்களுக்கு இருந்தது. ஆனால் அதுபோன்ற அறிவிப்பை ஜெட்லி வெளியிடவில்லை. அதேநேரம், வீட்டு வாடகை என்ற வகையில் இதுவரை 24 ஆயிரத்திற்கு மட்டுமே வருமான வரி விலக்கு தரப்பட்டது. அது இனி ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications