விவசாய பயிர் கடன்களுக்கு 2 % வட்டி மானியம்...மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாய கடன்களுக்கான 2 சதவிகித மானனயம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, விவசாய பயிர்க்கடனுக்கு 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில், 2 சதவீத வட்டியை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.

 Union cabinet approves 2 percentage loan subsidy for farmers

இதனால், விவசாயிகள் 7 சதவீத வட்டி மட்டுமே செலுத்தினால் போதுமானது. ஆண்டுதோறும் மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக் கடன்களுக்கான மானியத்தை அறிவிக்கும். வேளாண்மைக் கடன்களுக்கான மானியத்தை நடப்பு நிதியாண்டுக்கு மத்திய அரசு அறிவிக்காததால் விவசாயக் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வங்கிகள் நிறுத்தின. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் விவசாய பயிர்க்கடனுக்கான 2 சதவீதம் மானியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தள்ளது. வட்டித் தவணையை தொடர்ந்த செலுத்தி வரும் விவகாயிகளுக்கு மேலும் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union cabunet approves 2 percentage subsity for crop loans as there is no announcement in the union budget may be a relief to farmers
Please Wait while comments are loading...