டெல்டா விவசாயிகள் தப்பினர்.. தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: தமிழகத்தில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.

இதற்கு நடுவேயும், குத்தகை அடிப்படையில் நிலங்களை அரசு கையகப்படுத்தி வந்தது. ஆனால் போராட்டங்களால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் நில கையகப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இந்த நிலையில், டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு மற்றும், நில கையகப்படுத்துதலில் நிலவிய குழப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, திட்டத்தை கைவிடுகிறோம். திட்டம் தொடர்பாக இனிமேல் ஆய்வுகளும் நடத்த மாட்டோம்.
அதேநேரம், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். கரும்பிலிருந்து எத்னால் எரிபொருள் தயாரிக்கும் திட்டத்திற்கும், தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த கேரளா இப்போது, பாதகம் இல்லை என்பதால் ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளது. தமிழகமும் அதேபோன்ற ஒத்துழைப்பை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதனிடையே, அரசின் முடிவுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டுக்களையும், வரவேற்பையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications