தமிழக அரசின் வரைவு அவசர சட்டத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியது உள்துறை அமைச்சகம்!
மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தத்துக்கான தமிழக அரசின் அவசர சட்டத்தை தற்போது ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி: மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்துக்கான தமிழக அரசின் வரைவு அவசர சட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு எனும் தமிழர் பண்பாட்டு அடையாள உரிமை மீட்புக்காக தமிழகம் புரட்சியில் இறங்கியுள்ளது. இதையடுத்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்துக்கான அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு தயாரித்தது. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று அதிமுக எம்பிக்கள் அனைவரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து நேரில் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் வரைவு அவசர சட்டம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தில் இருந்து இன்று மாலைதான் திரும்புகிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு அந்த அவசர சட்டம் அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்னர் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பிப்பார். இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications