4 கட்ட தேர்தலில் 270 இடங்களில் பாஜக வெற்றி- மெஜாரிட்டி கிடைச்சுடுச்சு..இப்பவே ரிசல்ட் சொன்ன அமித்ஷா!
கொல்கத்தா: 18-வது லோக்சபா தேர்தலில் தற்போதே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது; பிரதமர் மோடி 5 ஆண்டுகாலம் மீண்டும் பிரதமராக தொடருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: லோக்சபா தேர்தலில் தற்போது வரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து உள்ளன. மொத்தம் 380 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 380 தொகுதிகளில் பாஜக 270 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட்டது. பிரதமர் மோடிக்கு லோக்சபா முழு பெரும்பான்மை இப்போதே கிடைத்துவிட்டது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை மமதா பானர்ஜியால் ஒரு போதும் தடுக்கவே முடியாது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என மமதா பானர்ஜியால் சொல்லவே முடியாது.
எங்களுடைய சகோதர, சகோதரிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது. இது மோடியின் உத்தரவாதம். குடியுரிமை வழங்குவது என்பது மத்திய அரசுக்கான அதிகாரம். எந்த ஒரு மாநில அரசாலும் அதை தடுத்துவிட முடியாது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மமதா பானர்ஜி பொய்களைப் பரப்பி வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் குடியுரிமை பெறுபவர்களுக்கு இந்த நாட்டில் ஒரு போதும் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்பது எங்களது வாக்குறுதி. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது வரை மொத்தம் 4 தேர்தல் முடிவடைந்துள்ளது. 4-வது கட்ட தேர்தல் மே 13-ந் தேதி 96 தொகுதிகளில் நடைபெற்றது. இதுவரை 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மொத்தம் 379 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 3 கட்ட தேர்தல்களும் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெறும். ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications