நடிகை பலாத்கார வழக்கில் ரயில்வே அமைச்சர் கவுடா மகனுக்கு பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பாலியல் பலாத்கார வழக்கில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கன்னட நடிகை மைத்ரியா கவுடா மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் தன்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் பெங்களூர் ஆர்.டி. நகர் காவல் நிலையித்தில் கார்த்திக் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொய்

பொய்

மைத்ரியா சொல்வது எல்லாம் பொய். எங்களின் குடும்ப பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று கூறினார் கார்த்திக் கவுடா.

முன்ஜாமீன்

முன்ஜாமீன்

கார்த்திக் முன் ஜாமீன் கோரி பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என்று போலீசாரிடம் கேட்டதுடன் வழக்கை 4ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

பிடிவாரண்ட்

பிடிவாரண்ட்

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக்கிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கைது

கைது

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கார்த்திக் கவுடா எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+