திருமணமாகாத பெண்கூட தனது குழந்தைக்கு கார்டியனாக முடியும்: உச்சநீதிமன்றம் தடாலடி
டெல்லி: திருமணம் ஆகாத பெண் தனது குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியை சேர்ந்த அரசு பெண் ஊழியர் ஒருவர் காதலருடன் திருமணத்துக்கு முன்பே 2 மாதங்கள் சேர்ந்து வசித்துள்ளார். அதனால் பெண் கர்ப்பமான பிறகு, காதலன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாத பெண்ணாக இருந்தாலும்கூட, குழந்தை உருவாக எந்த ஆண் காரணமோ அவரின், அனுமதியுடன்தான் தாய் கார்டியனாக இருக்க முடியும் என்ற விதிமுறையை எதிர்த்து அப்பெண் டெல்லி விசாரணை நீதிமன்றதில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு தள்ளுபடியான நிலையில், அப்பீலின்போது ஹைகோர்ட்டிலும் மனு தள்ளுபடியே செய்யப்பட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்திலும் அப்பீலுக்கு சென்றுள்ளார் அப்பெண். தனது மனுவில், "குழந்தையின் தந்தையின் பெயரை வெளியிட விரும்பவில்லை, 2 மாதங்களே சேர்ந்திருந்த தந்தைக்கு குழந்தை வளர்ப்பில் எவ்வித பங்கும் இல்லை" என கூறியிருந்தார்.
நீதிபதி விக்ரமஜித் சென் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விக்ரமஜித், "கீழ் நீதிமன்றங்கள், குழந்தையின் நன்மையை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக தீர்ப்பளித்துள்ளன. திருமணம் செய்யாவிட்டாலும், குழந்தையை அதன் தாய் கார்டியனாக இருந்து வளர்க்கலாம்" எனக் கூறியுள்ளார்.
தற்போதுள்ள சட்டப்படி, குழந்தையின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பி அவர் அனுமதியை பெற்ற பிறகே பெண் தனது குழந்தைக்கு கார்டியனாக முடியும். ஏனெனில், குழந்தையின் இயல்பான கார்டியன் தந்தையே ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications