மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் உ.பி.யை நாட்டின் முதன்மை மாநிலமாக்குவோம்: அமித்ஷா உறுதி

Subscribe to Oneindia Tamil

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நாட்டின் முதன்மை மாநிலமாக்குவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்ட வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பட்டாளம் வீடு வீடாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடியாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்து வரும் வாக்குறுதிகள் மிகப் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முசாபர்நகரில் அமித்ஷா

முசாபர்நகரில் அமித்ஷா

இந்நிலையில் முசாபர்நகர் பகுதியில் அமித்ஷா வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது அமித்ஷா பேசியதாவது: அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சிகளின் நில அபகரிப்புகள் ஏராளமான நிகழ்ந்தன. வன்முறை சம்பவங்கள் தலைதூக்கின. முசாபர்நகரில் 2013-ல் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில்தான் மத மோதல்கள் நிகழ்ந்தன.

முதன்மை மாநிலமாக்குவோம்

முதன்மை மாநிலமாக்குவோம்

பாஜக ஆட்சியில் உ.பி.யில் மதமோதல்கள் எங்கும் நடைபெறவில்லை. பாஜக ஆட்சியில் கிரிமினல்களை ஒடுக்கினார் முதல்வர் யோகி ஆதித்யநாத். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தாய்மார்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால் மாஃபியாக்கள் கை ஓங்கிவிடும். உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நாட்டின் முதன்மை மாநிலமாக்குவோம். உத்தரப்பிரதேசத்தில் 2.53 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலா ரூ3,000 வழங்கி உள்ளார். முந்தைய எதிர்க்கட்சி அரசுகள், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தின. ஆனால் பாஜக ஆட்சியில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ1.45 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

அகிலேஷ் மீது அட்டாக்

அகிலேஷ் மீது அட்டாக்

ஜாட் சமூகத்தின் ஜெயந்த் சவுத்ரியுடன் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் இந்த கூட்டணி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியாது. அகிலேஷ் யாதவ் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியை ஓரம்கட்டி விடுவார். இப்படித்தான ஆசம் கான் உள்ளிட்டோரை அகிலேஷ் யாதவ் ஓரம்கட்டினார். மக்களை பிரித்து வாக்குகளை பெறலாம் என சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக்தள் கட்சி நினைக்கிறது. ஆனால் வாக்காளர்கள் இதனை நிராகரிப்பார்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

முசாபர்நகரும் மேற்கு உ.பி.யும்

முசாபர்நகரும் மேற்கு உ.பி.யும்

2013-ம் ஆண்டு முசாபர்நகரில் ஜாட் மற்றும் முஸ்லிம்கள் இடையே மிகப் பெரிய அளவிலான மத மோதல் நிகழ்ந்தன. 60க்கும் மேற்பட்டோர் இம்மோதல்களில் கொல்லப்பட்டனர். பின்னர் இருதரப்பு இடையே சமானாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் ஓராண்டாக நடைபெற்ற மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஜாட் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் ஒன்றிணைந்து போரடினர். மேற்கு உ.பி.யில் ஜாட், முஸ்லிம்கள் அதிகம். இப்பகுதியானது பாஜகவுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேற்கு உ.பி.யின் பெரும்பாலான தொகுதிகளில் பிப்ரவரி 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு உ.பி.யில் கணிசமான இடங்களைப் பெற பாஜகவும் போராடி வருகிறது. அண்மையில் ஜாட் சமூகத் தலைவர்களை அமித்ஷா சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+