அரசு பள்ளிகளில் 100% மாணவர் சேர்க்கை.. கல்வித்துறை அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு
லக்னோ: அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என முயன்று வருகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் எனில் அதிகப்படியான எம்பிக்கள் பாஜகாவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே அதிக எம்பி தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தை பாஜக குறி வைத்திருக்கிறது. ஏற்கனவே இங்கு பாஜகவின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பதால் தங்களது சாதனைகளை மக்கள் மத்தியில் பிரசாரமாக கொண்டு செல்ல கட்சி திட்டமிட்டுள்ளது.

அதேபோல புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அதிரடி காட்டி வருகிறது. அந்த வரிசையில் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் கடந்ததையும் பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த வேறு யாரும் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீடித்ததில்லை என்பதே இந்த கொண்டாட்டத்திற்கான காரணமாகும்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் விதமாக 'ஸ்கூல் சலோ அபியான்' எனும் பிரசாரத்தை யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் தொடங்கி வைத்திருந்தார். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர்ந்திருக்கின்றனர்.

பெரும்பாலும் 7-16 வயதுள்ள குழந்தைகள்தான் படிப்பை பாதியில் இடை நிறுத்திக்கொள்கிறார்கள். இவர்களை மையப்படுத்திதான் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் கூறுகையில், "அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதில் உத்தரப் பிரதேச அரசு முன்னணியில் இருக்கிறது. இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
இவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களை மீட்பதில் நாங்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். எனவே உத்தரப் பிரதேசம் ஒருபோதும் குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்காது" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து தொடங்க இருப்பதால், மாணவர் சேர்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications