அமேதி: 'வளைத்த' நிலத்தை அரசிடம் ஒப்படைக்க ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு கோர்ட் உத்தரவு!
லக்னோ: அமேதியில் சர்ச்சைக்குரிய அரசுக்கு சொந்தமான நிலத்தை உடனே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஒப்படைக்க வேண்டும் என்று அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 1980களில் சாம்ராட் சைக்கிள் நிறுவனத்துக்கு 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கடந்த வாரம் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிளப்பியிருந்தார்.
இதனிடையே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான இந் நிலத்தை உத்தரப்பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்குமாறு வருவாய் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அமேதியில் உள்ள கௌரிகஞ்ச் வருவாய் நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாசங்கர் பாண்டே கூறியதாவது:
உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான சர்ச்சைக்குரிய நிலமானது சாம்ராட் சைக்கிள் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
ஆனால் போலியான ஆவணங்களைத் தயாரித்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனை அமேதி மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் தொழில் வளர்ச்சிக் கழக மண்டல மேலாளரே தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான இந்த நிலத்தை உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு உமாசங்கர் பாண்டே கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications