உ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை-போலீசிடம் இருந்த தப்பியதால் துப்பாக்கிச் சூடு!
கான்பூர்: மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு செல்லும் வழியில் போலீசார் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேசம் கான்பூரில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால் போலீசார் 8 பேரை ரவுடி விகாஸ் துபே கும்பல் சுட்டுக் கொன்றது.

இதனையடுத்து ரவுடி விகாஸ் துபே கும்பலை கூண்டோடு கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக போலீசிடம் இருந்து தப்ப முயன்ற விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 2 பேர் நேற்று போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் நேற்று விகாஸ் துபே சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அங்கிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு கார் மூலமாக விகாஸ் துபேவை போலீசார் அழைத்து வந்தனர்.
விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் கான்பூர் அருகே விபத்துக்குள்ளானது. இதனை பயன்படுத்தி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளார்.
Kanpur: One of the vehicles of the convoy of Uttar Pradesh Special Task Force (STF) that was bringing back #VikasDubey from Madhya Pradesh to Kanpur overturns. Police at the spot. More details awaited. pic.twitter.com/ui58XBbd82
— ANI UP (@ANINewsUP) July 10, 2020
இதனால் போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்க முயன்றனர். இதில் விகாஸ் துபே படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு விகாஸ் துபே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் பெரும் சவாலாக இருந்த விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அம்மாநில போலீசார் உறுதி செய்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications