பலாத்கார முயற்சி... 3 ஆண்களிடமிருந்து தப்பும் போது ரயில் மோதி 15 வயது சிறுமி பலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர் மீது ரயில் ஏறியதில் பரிதாபமாக பலியானார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள கடோஜி கலான் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை வானகத்திற்குள் இழுக்க முயன்றுள்ளனர்.

சிறுமியின் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்தபோது ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரம் அவ்வழியாக வந்த ரயில் சிறுமி மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி பலியானார். இதை பார்த்த அந்த மூன்று பேரும் ஆட்டோவில் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
கடைக்கு சென்ற மகள் பல மணிநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் தந்தை கடைத்தெருவுக்கு வந்தார். அப்போது ரயில் தண்டவாளம் அருகே சிதறிக் கிடந்த தனது மகளின் உடலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் நடந்த சம்பவம் பற்றி அவரிடம் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து போலீசில் லல்லா, கம்ரன் மற்றும் மோனு ஆகியோர் மீது புகார் அளித்தார். ஆனால் போலீசாரோ சிறிமி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று வழக்குப்பதிவு செய்யவில்லை. முதல்கட்ட விசாரணைக்கு பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications