உ.பி.யில் பசுக் காவலர்கள் வெறிச்செயல்.. இன்ஸ்பெக்டர் கொடூரமாக சுட்டுக் கொலை
புலந்த்சாகர்: உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில் பசுக் காவலர்கள் நடத்திய பயங்கர வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் மிகக் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சயானா என்ற கிராமத்தில்தான் இந்தக் கலவரம். இன்று காலை கிராமத்திற்கு வெளியே 25 பசுக்களின் இறைச்சி குவித்து வைக்கப்பட்டிருந்ததை சிலர் பார்த்தனர். தகவல் பசுக் காவலர்களுக்குச் செல்ல ஊரே கூடியது. அனைவரும் பெரும் வன்முறையில் இறங்கினர்.

சிலர் அந்த இறைச்சியை டிராக்டரில் போட்டு சிங்க்ராவதி காவல் நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கொட்டினர். பின்னர் போலீஸ் நிலையம் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலரைக் கைது செய்யக் கோரி வன்முறையில் குதித்தனர். காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த வாகனங்களையும் அவர்கள் தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.
நிலைமை மோசமடையவே பெருமளவில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலைக்கப் பார்த்தனர். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கை ஒரு கும்பல் குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டது.
Horrific, Subodh Kumar Singh SO @Uppolice of Syana, Bulandshahr shot & killed by mob. Eye witness claim they heard 11 fire shots. pic.twitter.com/nEZEwHfQ5c
— Sanjay Bragta (@SanjayBragta) December 3, 2018
அவர் வன்முறையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை ஜீப்பிலேயே வைத்து அக்கும்பல் சரமாரியாகத் தாக்கியது. துப்பாக்கிகளாலும் அவரை சரமாரியாக சுட்டனர். 11 ரவுண்டு சுட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் சுபோத் குமார் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல வன்முறைக் கும்பலின் தாக்குதலில் இன்னொரு உள்ளூர் நபரும் உயிரிழந்தார். புலந்த்சாகர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் நடத்தும் 3 நாள் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தக் கலவரம் வெடித்திருப்பதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. போலீஸார் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கை வன்முறைக் கும்பல் வெறித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications