எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சென்றால் மஞ்சள் காமாலை வரும்.. மக்களுக்கு சாபம்விட்ட உ.பி எம்எல்ஏ
தன்னுடைய கட்சியை தவிர வேறு கட்சி நடத்தும் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலை வரும் என்று உத்தர பிரதேச எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ராஜ்பூர் சாபம் விட்டுள்ளார்.
Recommended Video

லக்னோ: தன்னுடைய கட்சியை தவிர வேறு கட்சி நடத்தும் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலை வரும் என்று உத்தர பிரதேச எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ராஜ்பூர் சாபம் விட்டுள்ளார்.
சுகள்தேவ் பாரத் சமாஜ் கட்சி என்ற பெயரில் கட்சியை பதிவு செய்து சுயேட்சையாக உத்தர பிரதேசத்தில் எம்எல்ஏ ஆகி இருக்கும் ஓம் பிரகாஷ் தீவிர மோடி ஆதரவாளர். பல முறை மோடியை சந்திக்க விண்ணப்பம் விடுத்துள்ளார். முக்கியமாக குஜராத் மாடலை உத்தர பிரதேசத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த எம்எல்ஏ புதிய சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதன்படி தன்னுடைய கட்சியை தவிர வேறு கட்சி நடத்தும் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலை வரும் என்று உத்தர பிரதேச எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ராஜ்பூர் சாபம் விட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், நான் மாநிலம் முழுக்க இனி நிறைய கூட்டம் நடத்த போகிறேன். இந்த கூட்டத்தில் அந்த பகுதி மக்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு சாபம் விடுவேன். என் கூட்டத்தில் கலந்து கொள்ளாத, வேறு கூட்டத்திற்கு செல்லும் எல்லோருக்கும் மஞ்சள் காமாலை வரும். நான் சாபம் விட்டால் பலிக்கும்.
நீங்கள் வேறு கூட்டத்திற்கு சென்று மஞ்சள் காமாலை வந்துவிட்டால் அதை குணப்படுத்தும் மருந்து என்னிடம் உள்ளது. நீங்கள் என் கூட்டத்திற்கு வந்து, என்னிடம் மன்னிப்பு கேட்டு, என்னிடம் ஆசி வாங்கினால் உங்கள் சாபம் தீர்ந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications