கணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம்- வீடியோ வெளியிட்ட கொடூர கும்பல்
உத்தரபிரதேசத்தில் கொடூரமான சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன. கடைக்குப் போன தம்பதிகளை வண்டியில் இருந்து தள்ளிவிட்டு மரத்தில் கட்டி வைத்து கணவன் முன்னே நான்கு பேர் அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்து
Recommended Video
ராம்பூர்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேசத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தினசரி செய்தியாகி வருகின்றன. கடைக்குச் செல்லும் பெண்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. கடந்த வாரம் கணவனும் மனைவியும் பைக்கில் கடைக்குச் சென்ற போது வண்டியில் இருந்து இருவரையும் தள்ளி விட்டு விட்டு கணவன் கண் முன்னேயே அந்த பெண்ணை நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ந்து போன அந்த தம்பதியர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல நடவடிக்கைகளை எடுப்பதாக உத்தரபிரதேச மாநில அரசு கூறி வருகிறது. ஆனாலும் தினசரியும் கிராமங்களிலும் நகரங்களிலும் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 11ஆம் தேதி இரவு கணவனும் மனைவியும் இரு சக்கர வாகனத்தில் அருகில் இருந்த கடைக்கு சென்றனர்.

அவர்களை வழிமறித்த நான்கு பேர் தகராறு செய்தனர். அதையும் மீறி அவர்கள் வண்டியை எடுத்த போது அந்த கும்பல் வண்டியோடு பிடித்து இருவரையும் தள்ளியது. இதில் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். இருவரையும் அந்த கும்பல் இழுத்துக்கொண்டு சென்றது. கணவனை மரத்தில் கட்டி வைத்தது. கணவன் கண் முன்னாலேயே அந்த பெண்ணை நான்கு பேரும் பலாத்காரம் செய்தனர்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் வரவே, அங்கிருந்த கும்பல் தப்பி ஓடியது. பாதிக்கப்பட்டவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அந்த விசயத்தை அவர்கள் மறந்து விட்டனர். இரு தினங்களுக்கு முன்பு அந்த தம்பதியினருக்கு இணையத்திலும், வாட்ஸ் அப் பேஸ்புக்கிலும் அதிர்ச்சி காத்திருந்தது. பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அதை வீடியோவாக எடுத்து அதை இணையத்திலும் வெளியிட்டிருந்தனர். இது வைரலாக பரவியது. பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications