தாடி கணவன்.. கேடி மனைவி! கொழுந்தனுடன் ஓடி போன அர்ஷி! ஜாகீரின் ’அந்த’ வீக்னஸ்..கலவரமான காவல் நிலையம்!
லக்னோ: உபியில் மகளுக்கு நிச்சயித்த மணமகனுடன் மாமியார் ஓடிப்போய் திரும்பி வந்து தற்போது அவருடன் வாழ்ந்து வருவது ஊர் அறிந்த கதை. இந்த நிலையில் தற்போது அதே உபியில் கொழுந்தனுடன் ஓடிப் போய் இருக்கிறார் இளம் பெண் ஒருவர். அதற்கு கணவர் கூறிய காரணம் தான் அதிர்ச்சி ரகம். கணவர் தாடியை கிளீன் ஷேவ் செய்யாததால் சேவ் செய்திருந்த தனது கொழுந்தனுடன் மனைவி எஸ்கேப் ஆனதாக கூறி அதிர வைத்திருக்கிறார். ஆனால் காரணம் அது இல்லை.. என்ன தான் நடந்தது என பார்ப்போம்..
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளுக்கு நிச்சயம் செய்த இளைஞருடன் மாமியார் ஓடிப் போனார். அதிர்ச்சி அடைந்த கணவர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். ஒரு மாதத்திற்கு பிறகு நேபாள எல்லையில் தங்கி இருந்த அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
தினமும் தகராறு செய்யும் கணவன், திட்டிக்கொண்டே இருக்கும் மகள் என வாழ்க்கையை வெறுப்பாக இருந்த நிலையில், மருமகன் ஆறுதலாய் பேச நான் அவரிடம் தான் வாழ்வேன் என கூறி அதிர வைத்தார். இந்த சம்பவம் நாடு முழுக்க செய்தியாக வெளியாகி பரபரப்பையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியது. இது ஒரு புறம் இருக்க தற்போது மற்றொரு விவகாரம் மீண்டும் ஒரு விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் தனது கணவர் கிளீன் ஷேவ் செய்ய மறுப்பதாகவும் இதனால் அவரது தம்பியுடன் ஓடிப் போயிருக்கிறார் இளம்பெண் ஒருவர். உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்த முகமது ஜாஹிர், அர்ஷி ஆகியோருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. முகமது ஜாகிர் இஸ்லாமிய முறைப்படி நீண்ட தாடி வைத்திருந்தார். ஆனால் தனக்கு அது பிடிக்கவில்லை எனவும்,சுத்தமாக ஷேவ் செய்ய வேண்டும் என அர்ஷி கணவரிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அர்ஷி தொடர்ந்து வலியுறுத்த ஜாஹிரோ திட்டவட்டமாக தாடியை எடுக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் முகமது ஜாஹிரின் தம்பியான சபீருடன் அர்ஷி பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தன் அண்ணனைப் போல தாடி வளர்க்காத சபீர் ட்ரீம் செய்து எப்போதும் நீட்டாக இருப்பாராம். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சபீருடன் அர்ஷி மாயமானார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் முகமது ஜாகீர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தாடி வளர்ப்பது அர்ஷிக்கு பிடிக்கவில்லை, என் சகோதரன் அவருடன் மாயமாகிவிட்டார். என்னை கொல்ல அவர்கள் சதித்திட்டம் போட்டு இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதற்கிடையே தனது பெற்றோர் வீட்டுக்கு சபீருடன் அர்ஷி வந்திருக்கிறார். தொடர்ந்து இருவரும் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் தனது கணவரான முகம்மது ஜாஹிருடன் தனக்கு வாழ விருப்பமில்லை. அவர் பாலியல் ரீதியாக தகுதியற்றவர். தாடி எல்லாம் பிரச்சனை இல்லை. நான் சபீர் உடன் தான் வாழ விரும்புவதாக கூறினார். இதனையடுத்து காவல் நிலையத்திலேயே கண்ணீருடன் விவகாரத்தை சொல்லி விட்டு வந்திருக்கிறார் ஜாஹீர். தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications