ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..
டெல்லி : அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய நேர்முகத் தேர்வின் முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது.
அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டு தோறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின்தேர்வும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு என 3 நிலைகளாக நடத்தப்படுகிறது.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. 1,364 பணியிடங்களுக்கான அந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவு கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் இருந்து 17 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர்.
டிசம்பர் 14-ந்தேதி பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை சென்னையில் மட்டும் 900 பேர் எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
பிரதானத் தேர்வில் நாடு முழுவதும் 3 ஆயிரத்து 293 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. தேர்வின் இறுதி முடிவு இன்று மாலை வெளியிடப்படுகிறது.
இந்த நேர்முகத் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நேர்முகத்தேர்வு முடிந்த நான்கு நாட்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிடப்படுப்படுவது இதுவே முதல் முறையாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications