காஷ்மீர் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என்று சந்தேகம் #uriattack

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சீர்குலைத்து காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவாமல் செய்ய நினைக்கும் பாகிஸ்தான் சதித் திட்டத்தின் ஒரு பகுதிதான் யூரி பகுதியில் ராணுவத் தலைமையகம் தாக்கப்பட்டதன் பின்னணி என்று உளவுப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான்தான் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு நிதியுதவி செய்கிறது. ஜூலை 9ம் தேதி முதல் அங்கு நடந்து வரும் போராட்டங்கள், தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. தொடர்ந்து காஷ்மீர் பற்றி எரிய வேண்டும் என்பதே பாகிஸ்தானின் நோக்கம். அதன் ஒரு பகுதிதான் யூரி தாக்குதல் என்றும் உளவுப் பிரிவினர் கூறுகின்றனர்.

தற்போது தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளும் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது திட்டமிட்ட தாக்குதல் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் இந்தத் தாக்குதல் குறித்து உளவுப் பிரிவினருக்கு எந்தத் தகவலும், துப்பும் கிடைக்கவில்லை.

காஷ்மீரில் போராட்டம் நடத்தி வருவோரை சமாளித்து அடக்கும் வேலைகளில் பாதுகாப்புப் படையினர் மும்முரமாக இருக்கும் நிலையில் மறுபக்கம் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுறுவி வருவதாகவும் உளவுப் பிரிவு கூறுகிறது.

இன்று யூரியில் நடந்த தாக்குதலிலும் கூட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளே தொடர்பு கொண்டிருக்கலாம் என்று உளவுப் பிரிவு வலுவாக நம்புகிறது. தீவிரவாதிகள் மிகப் பெரிய அளவில் ஆயுதங்களுடன் வந்திருந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+