மோடியைச் சந்திக்கிறார் நான்சி பவல்: முடிவுக்கு வருகிறதா 9 ஆண்டு அமெரிக்க விசா இழுபறி...?
டெல்லி: குஜராத் முதல்வரும், பாஜக பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடியை இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் நான்சி பவல் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி, மோடிக்கு விசா வழங்க அனுமதி மறுத்து வருகிறது அமெரிக்கா. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி கிடைக்க இருக்கிறது.
சமீபகாலமாக மோடிக்கு விசா வழங்குவதில் எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என சூசகமாக அமெரிக்கா தெரிவித்து வந்தது. இந்நிலையில், தற்போது மோடியை இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் நான்சிபவல் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

வெற்றி வாய்ப்பு....
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரதம வேட்பாளரான மோடிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. இந்நிலையில், மோடி பிரதமரானால் அவருடன் நல்லதொரு உறவைத் தொடருவோம் என ஏற்கனவே அமெரிக்கா தெரிவித்து இருந்தது.

தேவ்யானி கைது....
இதற்கிடையே கடந்தாண்டு இறுதியில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தேவ்யானி கைது விவகாரத்தால் இந்திய-அமெரிக்க உறவில் விரிசல் விழும் சூழ்நிலை உண்டானது. எனவே, இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மோடியைச் சந்திக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

காந்திநகரில் சந்திப்பு...
நான்சி, மோடியை இந்தவார இறுதியில் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான முன் அனுமதியை பெற்றிருப்பதாக அமெரிக்க தூதரத் தகவல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.மோடி-நான்சி சந்திப்பு காந்திநகரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

முக்கியச் சந்திப்பு...
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் மோடியைச் சந்திக்க இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications