வழக்கை வாபஸ் பெறாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம்...: தேவ்யானி அப்பா
மும்பை: விசா மோசடி என தன் மகள் மீது சித்தரிக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானியின் தந்தை தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கைது விவகாரத்தில் ஆரம்பம் முதல் தனது கண்டனத்தைத் தேரிவித்து வரும் இந்திய அரசு, அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்காவை வற்புறுத்தி உள்ளது.

இந்நிலையில் தேவயானியின் தந்தையும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே நேற்று, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது மகள் கைது செய்யப்பட்டதில் திட்டமிடப்பட்ட சதி திட்டம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. அவர் எந்த ஒரு மோசடியும் செய்யவில்லை. காணாமல் போன அவரது பணிப்பெண் சங்கீதாவுக்கு சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் தவறான தகவல் எதையும் கொடுக்கவில்லை.
இந்த பிரச்சினையில் மோசடி எதுவும் நடந்து இருந்தால், அதை பணிப்பெண் சங்கீதா தான் செய்து இருப்பார். விசா பெற சங்கீதா தான் விண்ணப்பம் செய்தார். அவர் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு உள்ளார். அமெரிக்கா அதிகாரிகளால் அவர் இருதடவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். இதில் பயன் பெற்றது யார்?. சங்கீதா தான் விசா பெற்று உள்ளார். எனவே இதில் மோசடி நடந்து இருந்தால், அதை சங்கீதா தான் செய்து இருக்க வேண்டும்.
எனது மகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சித்தரிக்கப்பட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலி ஆவணங்களால் எப்.ஐ.ஆர். உருவாக்கப்பட்டு உள்ளது. எனது மகள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். அவரது கவுரவம் மீட்டெடுக்கப்பட வேண்டும். நான் சோனியா காந்தியையும், பிரதமரையும் சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் மீதான வழக்குகளை அமெரிக்க அரசு திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன்.
இந்த பிரச்சினையில் அமெரிக்க அரசு வக்கீல் பிரித் பராரா தெரிவித்து உள்ள விளக்க அறிக்கை கண்டனத்துக்குரியது. அவரது அறிக்கை இந்திய அரசையும், இந்திய நீதித்துறையையும் சேதப்படுத்தி உள்ளது. இந்திய கோர்ட்டுகள் சங்கீதாவுக்கு நீதி வழங்கவில்லை, அவரை அமைதிப்படுத்த முயற்சி நடந்து உள்ளது என்று பிரித் பராரா குற்றம் சாட்டி உள்ளார். இது கோர்ட்டு அவமதிப்பு ஆகும். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications