அமெரிக்காவில் இருந்து வந்த மெகா புயல்.. அடுத்த நொடி எகிறி அடித்த இந்திய பங்குச்சந்தைகள்.!
மும்பை: இந்திய முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாள் என்றே சொல்லலாம். இன்று காலை பங்குச்சந்தைகள் சற்று இறக்கத்தோடு ஆரம்பித்தாலும் கூட ஒரே மணி நேரத்தில் அது மொத்தமாக மாறியது. அதன் பிறகு பங்குச்சந்தை தாறுமாறாக அதிகரிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவில் அடித்த புயலே இந்தியப் பங்குச்சந்தையை உயர வைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று வியாழக்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் ஆரம்பித்தன. ஆரம்பத்தில் சற்று சரிவுடனேயே இந்தியப் பங்குச்சந்தை தொடங்கியது. முதல் ஒரு மணி நேரம் வரை கூட இந்தியப் பங்குச்சந்தைகள் இதே நிலையில் தான் இருந்தது. ஆனால், அதன் பிறகே சந்தை மெல்ல மாறியது.

பங்குச்சந்தை
வர்த்தகம் தொடங்கி ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தையில் எதிர்பாராத திருப்பம் நடந்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிவில் இருந்து மீண்டு உயர ஆரம்பித்தது. அங்கு எகிற ஆரம்பித்த பங்குச்சந்தை பிற்பகல் வரை அப்படியே இருந்தது.. ஒரு கட்டத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேலும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 120 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வர்த்தகமாகின. அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு மேலாக நிலவி வந்த ஷட் டவுன் முடிவுக்கு வந்ததே இதற்குப் பிரதானக் காரணமாகும்.
உயர்வு
சர்வதேச சந்தையின் எதிரொலியாக முதலில் சரிவுடன் ஆரம்பித்த சந்தை, அமெரிக்காவில் இருந்து வந்த புயலால் எகிற ஆரம்பித்தது. இப்போது பிற்பகல் 1.45 மணியளவில் 84,889 சென்செக்ஸ் புள்ளிகளிலும். நிஃப்டி 25,999 புள்ளிகளிலும் வத்தகமாகி வருகிறது. கிரேடெக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ், ப்ரேஸிஸின் ஒயிர்ஸ் இந்தியா, டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
முன்பே குறிப்பிட்டது போல அமெரிக்காவில் ஷட் டவுன் முடிவுக்கு வந்ததே இதற்குப் பிரதானக் காரணமாகும். எப்போதுமே அமெரிக்காவில் ஏற்படும் எந்தவொரு முக்கிய மாற்றமும் ஆசிய மற்றும் இந்தியச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படியே ஷட் டவுன் முடிவுக்கு வந்ததும் இங்குச் சந்தை உயர ஆரம்பித்தது.
அமெரிக்காவில் அடித்த புயல்
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட ஷட் டவுனாக இது கருதப்படுகிறது. அக்டோபர் 1ம் தேதி ஆரம்பித்த இந்த ஷட் டவுன் 43 நாட்கள் நீடித்தது. நீண்ட இழுபறிக்கு பிறகே செலவின மசோதா அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்தே அந்த மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன் மூலம் அமெரிக்க ஷட் டவுன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
ஆசியா முழுக்க
அதிபர் டிரம்ப் அந்த மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு, பெரும்பாலான ஆசியச் சந்தைகள் உயர்ந்தன. ஜப்பானின் நிக்கி குறியீடு 153 புள்ளிகள் உயர்ந்து 51,217 ஆகவும், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 30 புள்ளிகள் உயர்ந்து 4180 ஆகவும் வர்த்தகமாகின. அமெரிக்க அரசு ஷட் டவுன் முடிவுக்கு வந்ததால், ஆசியச் சந்தைகளில் ஏற்பட்ட இந்த ஏற்றத்தின் தாக்கம் இந்தியச் சந்தையிலும் தெளிவாகத் தெரிந்தது. இதன் காரணமாகவே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வேகமாக உயர்ந்து வர்த்தகமானது.
-
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications