2.89 கோடி வாக்காளர்கள் மொத்தமாக நீக்கம்! SIR பணிகளுக்கு பின் தலைகீழாக மாறிய உபி வாக்காளர் பட்டியல்
லக்னோ: SIR பணிகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களில் 18.70% பேர், அதாவது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைகிறது.
பீகாரில் கடந்த மாதம் தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்பு அங்கு எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டன. அதேபோல மற்ற தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம் மாநிலங்களில் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR பணிகளுக்குப் பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது மொத்த வாக்காளர் பட்டியலில் 18.70% பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 46 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டதாகச் சொல்லி நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 15.44 கோடியாக இருந்த உத்தரப் பிரதேச வாக்காளர்களின் எண்ணிக்கை, 12.55 கோடியாகக் குறைகிறது.
தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு லக்னோவில் 39.9 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அது 27.9 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 30 சதவிகித வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல், லலித்பூரில் வாக்காளர் எண்ணிக்கை 9.5 லட்சத்தில் இருந்து 8.6 லட்சமாகக் குறைந்து. அதாவது 10 சதவிகித சரிவைக் கண்டது.
மொத்தம் 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதில், 2.17 கோடி பேர் வேறு இடங்களுக்கு மாறியவர்கள் ஆகும். 46.23 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும் 25.47 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்ததாக நீக்கப்பட்டுள்ளது.
இப்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எதாவது பிழைகள் இருப்பதாகக் கருதினால் பொதுமக்கள் முறையீடு செய்யலாம். அவை குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கையை எடுக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 6 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications