திருமணமான உறவுக்கார பெண் மீது காதல்.. பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு கடவுள் மீது பழிபோட்ட உசேன் செய்க்!
காந்தி நகர்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த 46 வயது நிரம்பிய நபர் தனது உறவுக்காரரின் மனைவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில் போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து கைதான நிலையில் அல்லா சொல்லி தான் இப்படி செய்ததாக கூறி பழி போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எக்ராஜ் உசேன் செய்க். இவருக்கு வயது 46. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜமால்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது வீட்டு அருகே உறவினர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் திருமணம் ஆனவர்.

இந்நிலையில் தான் எக்ராஜ் உசேன் செய்க்கிற்கு தனது உறவுக்காரரின் மனைவி மீது காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலை எக்ராஜ் உசேன் செய்க் அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தி உள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காதலை ஏற்க மறுத்துள்ளார். மேலும், உசேன் செய்க்கை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் விடவில்லை. அந்த பெண்ணுக்கு பின்னால் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது உறவுக்காரரிடம், ‛‛உங்களின் மனைவியை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். மாறாக என் காதலுக்கு யாராவது குறுக்கே நின்றால் அவர்களை கொன்றுவிடுவேன்'' என்று மிரட்டினார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் 2024ம் ஆண்டில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உசேன் செய்க்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் உசேன் செய்க் ஜாமீனில் வெளியே வந்தார். தனது நடத்தையை மாற்றி கொண்டு வாழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உசேன் செய்க் அப்படி எதையும் மாற்றி கொள்ளவில்லை.
ஜாமீனில் வெளியே வந்த உசேன் செய்க் மீண்டும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் ஆசைப்பட்ட பெண்ணின் மாமியார் இருந்தார். இவரை பார்த்தவுடன் இடத்தை காலி செய்யும்படி அவர் விரட்டினார். ஆனால் உசேன் செய்க் போக மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி வீட்டுக்குள் இருந்த உறவினரின் மனைவியை பார்த்து தன்னுடன் வரும்படி கூறினார். அதோடு அவரது கையை பிடித்து இழுத்ததோடு, தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார்.
இதனை பார்த்த அந்த பெண்ணின் மாமியார் உசேன் செய்க்கை திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார். அப்போது அவரிடம், உனது மகன் மற்றும் உனது கணவரை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இதனால் மீண்டும் அந்த பெண் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உசேன் செய்க்கை கைது செய்துள்ளனர்.
கைதான உசேன் செய்க்கிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ‛‛என்னிடம் ஒருவர் பேசினார். எங்கே உலா வருகிறாய்? இந்த விஷயத்தின் மேட்டர் உனது கையில் தான் உள்ளது. உடனே போய் அந்த பெண்ணை இழுத்து கொண்டு வா என்று கூறினார். அது அல்லாவின் வாய்ஸாகும்'' என்று கூறினார். மேலும் போலீஸ் விசாரணையில் பலமுறை அல்லா சொல்லி தான் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications