Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரிக்கு வரி உண்மை.. உ.பி.யில் வாக்காளர்கள் ஏன் பாஜகவுக்கு எதிராக திரும்பினார்கள்? அன்றே கணித்த யாதவ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகளை ஓரளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக கணித்தது அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ்தான். எக்சிட் போல் முடிவுகளில் பாஜக கூட்டணிக்கு அனைத்து மீடியாக்களும் வாரி வழங்கியபோது, இவர்தான், அதற்கு முன்பே, அப்படியெல்லாம் வெல்ல வாய்ப்பில்லை எனக் கூறினார். பாஜக 250 தொகுதிகளை விட குறைவாகவே வெல்லும் என அவர் கூறியிருந்தார்.

இன்று மதியம் 3 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 294 தொகுதிகளில் வெற்றி அல்லது முன்னிலையில் இருந்தது. நினைவிருக்கட்டும், இது கூட்டணியின் மொத்த எண்ணிக்கையாகும். பாஜக 242 தொகுதிகளில்தான் முன்னிலையில் இருந்தது.பாஜகவின் பின்னடைவுக்கு உ.பி. மாநில ரிசல்ட் முக்கிய காரணம். உ.பி. பாஜக கோட்டை, வாரணாசியில் மோடி களம் காண்கிறார், அங்குதான் யோகி ஆதித்யநாத் முதல்வராக வீற்றிருக்கிறார், அப்படியிருக்கும்போது எப்படி உ.பி. காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கும் என்று பலரும் எள்ளி நகையாடினர்.

ஆனால், உ.பி. குறித்த யோகேந்திர யாதவ் ஏப்ரல் 26ம் தேதியே சரியாக கணித்திருந்தார். இதோ அவரது அப்போதைய பதிவு-

உத்தரபிரதேசத்தில் அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம். மீரட் முதல் பனாரஸ் வரையிலான 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமப்புற வாக்காளர்களுடன் நான் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிறகு, அனைத்து சாதிகளிலும் பாஜகவிற்கு ஆதரவு குறைந்து வருவது தெளிவாக தெரிந்தது. 60 இடங்களைத் தக்கவைப்பது கூட பாஜகவுக்கு சவாலாகத் தெரிகிறது, சிலர் 50 க்கும் குறைவாகவே கணித்துள்ளனர்.

கிராமப்புற வாக்காளர்கள் மோடி மீது அலட்சியத்தையே காட்டுகின்றனர். இம்முறை அவரது பெயருக்கா வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை. யோகி ஆதித்யநாத் மோடியை விட அதிக புகழைப் பெற்றுள்ளார், ரவுடிகளை கட்டுப்படுத்தியவர் என்ற நல்ல பெயர் யோகிக்கு உள்ளது. ஆனாலும், பெரும்பாலான பாஜக எம்பிக்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் மீது மக்களுக்கு பரவலான கோபம் உள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் வாக்காளர்களின் முடிவை பெரிதும் பாதிக்கிறது. கிராமங்களில், தெரு விலங்குகள் கட்டுப்பாடற்று அலைவது ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளன. மூன்றாவது ஐந்தாண்டு முறையாக பதவியை தந்தால் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தில் பல வாக்காளர்கள் மாற்றத்தை தர விரும்புகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, பாஜக வாக்காளர்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்த முறை அந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று கூறுகிறார்கள். சமாஜவாதியும் காங்கிரஸும் தங்கள் வாக்குப் பங்கை தக்கவைத்துக் கொள்கின்றன. பகுஜன் சமாஜ் சிறிது சரிவைக் காணும், ஆனால் அந்த ஓட்டு பாஜகவை நோக்கி நகரப்போவது இல்லை.

2019 உடன் ஒப்பிடும்போது பாஜகவின் பத்தில் ஒரு பங்கு வாக்குகள் கூட சமாஜ்வாதி-காங்கிரஸுக்கு மாறினால், பாஜக 20 இடங்களை இழக்கக்கூடும். ஒரு பெரிய மாற்றம் ஒரு முழுமையான தலைகீழ் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

எனது கணிப்பில் சந்தேகம் இருந்தால் நீங்கள் கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களிடம் கேட்டுப் பாருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். இன்று மதியம் 3 மணி நிலவரப்படி, பாஜக உ.பி.யில் 33 தொகுதிகளில்தான் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+