உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்கு 2 சிறுமிகள் பலி – 4 பேர் கைது
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்குள்ள உஸ்காய்த் பகுதியில் உள்ள காத்ரா கிராமத்தில் 14 மற்றும் 15 வயது கொண்ட இரண்டு சிறுமிகளை கடந்த செவ்வாய்கிழமை காணவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள போலீசார் அப்போது மறுத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கொடூர கும்பலால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று கண்பிடிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து போலீசார் 7 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் கான்ஸ்டபிள் சார்வேஷ் யாதவ் மற்றும் ராக்ஷாபால் யாதவ் ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும்,4 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதிகளில் பரவியதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலை சீர்படுத்தப்பட்டது.
சிறுமிகள் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications