ஐ.எஸ்.ஐ.உடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு: ராகுல் புகாருக்கு உ.பி. அரசு மறுப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் முஸ்லிம்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு வைத்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த புகாரை அம்மாநில அரசு மறுத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் கலவரத்தில் உறவுகளை பலி கொடுத்ததற்கு பழிவாங்க முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.உடன் தொடர்பில் இருப்பதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுலின் பேச்சுக்கு முஸ்லிம் மதகுருக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராகுலின் குற்றச்சாட்டை உத்தரப்பிரதேச மாநில அரசும் மறுத்துள்ளது.
அம்மாநில உள்துறை செயலர் கமல் சக்சேனா, மாநில அரசுக்கு மத்திய உளவு அமைப்போ அல்லது உள்துறை அமைச்சகமோ முசாபர்நகர் முஸ்லிம்களுக்கும் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. நாங்கள் மிகவும் விழிப்புடனேயே இருக்கிறோம் என்று பதில் கொடுத்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications