பார்க்கவே ஒரு மாதிரி? முதலையை காரில் பூட்டி வைத்த மக்கள்.. நள்ளிரவில் அது பாட்டுக்கு தெருவுல போகுது
கான்பூர்: பொதுவாக, மழைக்காலங்களில் நீர்நிலைகளில் வசித்து வரும் முதலைகள், நிலப்பகுதிக்கு வந்துவிடுவது வழக்கமாகும்.. கனமழை, வெள்ளம் காரணங்களினால் ஏரிகள், குளங்கள், குட்டைகளிலிருந்து, ஊருக்குள் வந்துவிடக்கூடும். அந்தவகையில், உத்திரபிரதேசத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்கிறார்கள்.. தற்போது நடந்துள்ள சம்பவம் இணையத்திலும் வீடியோவாக வெளிவந்து, ஆச்சரியத்தையும், திகைப்பையும் உண்டு பண்ணி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, பிஜ்னூரில், நங்கல் சோதி கிராமத்திற்குள் முதலை ஒன்று புகுந்ததால், பொது மக்கள் பீதியடைந்தனர். கிராமத்தின் தெருக்களில் அந்த முதலை பல மணி நேரமாக சுற்றி திரிந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருந்தது.

எருமை மாடு
அதேபோல, கடந்த ஜூன் மாதமும் ஒரு துயர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்தது.. கோண்டா மாவட்டத்திலுள்ள காக்ரா நதிக்கரையில்,ராஜா பாபு என்ற 13 வயது சிறுவன் தன்னுடைய எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.
அப்போது முதலை முதலில் அந்த சிறுவனின் காலைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு, பிறகு அவனது கழுத்தைப் பிடித்து தண்ணீருக்குள் கொண்டு சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து காவல்துறையினரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை தேடினார்கள்.. ஆனால், சிறுவனின் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
சிறுவனின் தாடையை பிடித்திழுத்து
ஆனால், சிறுவனின் தாடையை பிடித்து, முதலை தண்ணீருக்குள் இழுத்து செல்லும் வீடியோ, அந்த நேரத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது.. அதில், சிறுவனின் தலை சில வினாடிகள் தண்ணீருக்கு மேலே வந்தது, பிறகு, முதலை கீழே இழுக்கிறது, சிறிது நேரத்தில் ஆற்றில் முழுவதுமாக மறைந்து விட்டது. .

காக்ரா நதிக்கரையின் நீர் மட்டம் அதிகரிப்பதால், கிராமத்தைச் சுற்றி முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பதாக கிராம மக்கள் சொல்கிறார்கள்.. 2 மாதங்களுக்கு முன்பும், இப்படித்தான் ஒரு உயிரிழப்பு நடந்ததாம்..
பெட்ரோல் பம்ப் தெரு
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு முதலையின் நடமாட்டம் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.. ஷாஜகான்பூரின் கடியானா நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகிலுள்ள தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிகாலை 2 மணிக்கு அந்த பகுதியிலுள்ள நாய்கள் வெறித்தனமாக குரைக்கத் தொடங்கியது.. எப்போதுமில்லாத அளவுக்கு திடீரென நாய்கள் ஒன்றாக சேர்ந்து குரைத்ததால், அந்த பகுதி மக்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.. அப்போது தெருவில் ஒரு முதலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்..
காருக்குள் சிறைப்படுத்தினர்
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து பொதுமக்கள் பதறி ஓடினார்கள்.. உடனடியாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. ஆனால், அந்த நேரத்தில் வன அதிகாரிகள் யாரும் அந்த இடத்திற்கு வரவில்லை என்பதால், பொதுமக்களே முதலையை பிடிக்க களமிறங்கினார்கள்.
கயிறுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டுவந்து, முதலையை அடக்க முயன்றனர்.. பிறகு முதலையின் வாயை பாதுகாப்பாக கட்டி, தற்காலிகமாக கட்டுப்படுத்த ஒரு காருக்குள் அடைத்து வைத்தனர்.. இரவு முழுவதுமே முதலை பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டது.. முதலையை காருக்குள் அடைக்க, உள்ளூர்வாசிககளுக்கு 2 மணி நேரமானதாம். எனினும், முதலை நடமாட்டத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பெருகிய கூட்டம் - பரபரப்பு
இரவு முழுவதும் நடந்த பரபரப்பினால், முதலை சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரவிவிட்டது. இதனால், முதலையை பார்க்க மிகப்பெரிய கூட்டம் கூடிவிட்டது. .
பிறகு காலை 9:30 மணியளவில், வனத்துறையினர் முதலையை பாதுகாப்பாக ஒரு கூண்டில் மாற்றி கொண்டு சென்றனர்.. கங்கை நதியுடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய வடிகால் வழியாக அந்த பகுதிக்குள் முதலை நுழைந்ததாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.. மகர்ரா நதியிலிருந்து அருகிலுள்ள விவசாய வயல்கள் வழியாக ஓடும் வடிகால் வழியாக வந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இந்நிலையில், முதலை தெருவில் நடமாடியதும், பிறகு அது காருக்குள் அடைக்கப்பட்டதும், வீடியோவாக இணையத்தில் வெளியாகி உள்ளது. வெளியானது












Click it and Unblock the Notifications