வில்லங்கம் தந்த ஆசை.. ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா - தங்கைக்கு கல்யாண ஏற்பாடு.. அப்பறம்?
கான்பூர்: அக்கா - தங்கை இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடிவானது.. இதற்காக மாப்பிள்ளைகளை தேடி தேடி அலைந்து கண்டுபிடித்தார் அப்பெண்களின் தகப்பனார்.. கடைசியில் நடந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் கவனத்தை பெற்று வருகிறது.
எத்தனையோ திருமணங்கள், மணமேடைகள் வரை வந்து நின்று விடுகின்றன.. அதிலும், தாலி கட்டுவதற்கு கடைசி நொடியிலும் பல திருமணங்கள் நின்றுபோய்விடுகின்றன. சில சமயம் சம்பந்தப்பட்ட மணப்பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ இந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

விநோத திருமணங்கள்
அல்லது தாலி கட்டும், மணமக்களில் யாராவது ஒருவர், மண்டபத்திலிருந்தே காணாமல் போய்விடுகிறார்கள்.. இதுபோன்ற சோகமான மற்றும் விநோதமான திருமண நிகழ்வுகள் இணையத்தில் வைரலாவதுண்டு. அந்தவகையில், உத்தரபிரதேசத்தில் ஒரு திருமண வைபவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது கர்னாவால் என்ற கிராமம்.. இங்கு, ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா - தங்கை வசித்து வருகிறார்கள்.. இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில், கல்யாணம் செய்ய வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக இருந்தது.
தடபுடல் கல்யாண ஏற்பாடுகள்
இதற்காகவே காத்திருந்து ஒருவழியாக மணமகன்களை தேடிப்பிடித்தனர்.. பெற்றோர் ஆசைப்பட்டபடியே, ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணமும் முடிவானது.. இதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்து கொண்டிருந்தார்கள்..
அந்த நேரத்தில் மணமகள்கள் இருவரும் அலங்காரம் செய்து கொள்வதற்காக, பியூட்டி பார்லருக்கு கிளம்பினார்கள்.. அவர்களது உறவினர்களே, அக்கா - தங்கையை பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்றனர்.. அங்கே மேக்கப் செய்து முடித்துவிட்டு, மறுபடியும் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.. அப்போது இவர்களது காருக்கு முன்னால், ஒரு பைக் சென்று கொண்டிருந்தது.. அந்த பைக்கில் 3 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தார்கள்..
எதிர்பாராத சம்பவம்
மணமகள்களின் கார், எதிர்பாராதவிதமாக லேசாக அந்த பைக்கில் இடித்துவிட்டது. இதனால் பைக்கில் இருந்த 3 இளைஞர்களும், பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டனர்..
இதனால் ஆத்திரமடைந்த 3 இளைஞர்களும், காரில் இருந்தவர்களுடன் தகராறு செய்தனர்.. ஒருகட்டத்தில் ஆவேசம் அடங்காமல், மேக்கப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்த மணமகள்கள் 2 பேரையும், காரிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு தாக்கினார்கள்.. முகத்தில் மேக்கப் இருந்ததால், கீழே கிடந்த சேற்றை அள்ளி, மணமகள்களின் முகத்தில் வீசினார்கள்...
மண்டபத்திலேயே அதிரடி
அதற்குள் இந்த விஷயம், அந்த பெண்களின் வீட்டிற்கு தெரிந்து, அவர்களும் திரண்டு வந்துவிட்டனர்.. தங்கள் வீட்டு பெண்கள் மீது சேற்றை வாரி இறைத்த கோபத்தில், இளைஞர்களை சுற்றி வளைத்தனர்.. உடனே பதிலுக்கு கோபம் அடைந்த இளைஞர்கள், தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுடன் திருமண மண்டபத்துக்கே வந்துவிட்டனர்..
அங்கு மிகப்பெரிய கலவரம் செய்ததோடு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை அடித்து உடைத்தனர்.. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களையும் தாக்கினர்.. இதில் மணமகள்களின் அப்பா உட்பட பலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது..
ஒரே பரபரப்பு - சலசலப்பு
இந்த வன்முறை கலவரத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மணமகன்கள், அந்த கல்யாண பெண்களை திருமணம் செய்ய முடியாது என்றனர்.. இதனிடையே, திருமண மண்டபத்தில் கலவரம் நடப்பதை அறிந்த போலீசார், விரைந்து வந்து மணமகன்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. ஆனாலும், அந்த 2 மணப்பெண்களும் தங்களுக்கு வேண்டாம் என்று உறுதியுடன் சொல்லிவிட்டனர். இதனால், அந்த கல்யாண மண்டபமே பெரும் பரபரப்பாகிவிட்டது..
ஒரு சின்ன பைக் விபத்து, மிகப்பெரிய மோதலாக உருவெடுத்த சம்பவம் மதுராவில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. அத்துடன், ஒரே நாளில் ஒரே மேடையில் தன்னுடைய மகள்களுக்கு திருமணத்தை நடத்தவிருந்த பெற்றோரின் கனவும் நொறுங்கிவிட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications