Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 பேரை திருமணம் செய்து பணம், நகையை திருடிய பெண்... ஏழாவதாக புருஷனாக வேண்டிய சங்கரால் நடந்த சங்கதி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் திருமணமாகாத ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களது வீடுகளில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடும் மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஆறு பேரின் நகை, பணத்தை திருடிய பெண், ஏழாவதாக திருமணம் செய்ய முயன்றபோது கூட்டாளிகளுடன் அந்த பெண் சிக்கியதாக காவல் துறை டிஎஸ்பி தெரிவித்தார்.

திருமணம் ஆகாத இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்யும் கும்பல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறார்கள். அவர்களை போலீசார் மோசடி புகாரில் கைது செய்து வருகிறார்கள். 30 வயதை கடந்த இளைஞர்களின் பெற்றோர்களை சந்தித்து நல்ல பெண் இருப்பதாகவும், வசதி இல்லாத அந்த பெண்ணுக்கு நகை, பணம் போட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சில தரகர்கள் புகைப்படங்களுடன் வலம் வருகிறார்கள்.

uttar pradesh marriage scam

அப்படிப்பட்ட தரகர்களின் வலையில் சிக்கும் ஆண்கள் மற்றும் குடும்பத்தினர் பணம் நகைளை பறிகொடுத்து, ஊருக்குள் மரியாதையை இழந்து, ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். ஊரறிய திருமணம் செய்யும் பெண்கள் திடீரென மறுநாளே பணம் நகையுடன் மாயமாகுகிறார்கள்.. அப்படிப்பட்ட சம்பவம் பல இடங்களில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

உத்தரப்பிரதேசத்தல் பூனம் என்பவர் மணமகளாக வலம் வருவார். அவருக்கு சஞ்சனா குப்தா என்பவர் தாயாக போஸ் கொடுப்பபார். பூனத்திற்கு விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகிய இரண்டு தரகர்கள் மாப்பிள்ளை பார்ப்பார்கள். திருமணத்திற்கு நாள் குறிக்கும் முன்பு மாப்பிள்ளையிடம் கணிசமாக பணம் கேட்பார்கள்.

அதை வசூலிக்கும் அவர்கள் பூனத்தை திருமணம் செய்து வைப்பார்கள். பூனமும் நல்ல பிள்ளையாக திருமணம் செய்து அங்கு வசிப்பார். மணமகன் வீட்டில் இருந்து பூனம் அடுத்த சில நாளிலேயே பணம், நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிடுவார். இதுதான் அவர்களின் வழக்கம்

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் உபாத்யா என்பவர் தனக்கு பெண் தேடிக்கொண்டிருந்தார். இதை கண்ட விமலேஷ் வர்மா , சங்கரை அணுகி பெண் இருக்கிறது. நல்ல அழகான படித்த பெண் என்று கூறி புகைப்படத்தை காண்பித்துள்ளார். இந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஒன்றரை லட்சம் செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார். அதற்கு சங்கரும் சரி என்று கூறியிருக்கிறார். கடந்த 21ம் தேதி சங்கரை நீதிமன்றத்திற்கு அழைத்த சென்ற விமலேஷ் பூனத்தை மணப்பெண் என அறிமுகம் செய்தார். சஞ்சனாவை வழக்கம் போல் தாயார் என்று அறிமுகும் செய்து வைத்துள்ளார் விமலேஷ்..

அப்போது சங்கரிடம் ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தால் உடனே திருமணம் என்று விமலேஷ் ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் சங்கருக்கு அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பணம் தருகிறேன்.. ஆனால் அவர்களின் ஆதார் கார்டு உள்பட அனைத்து விவரங்களும் வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்கள் தரமறுத்துவிட்டார்கள். இதையடுத்து ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என் சந்தேகம் அதிகமான நிலையில் திருமணம் செய்ய சங்கர் மறுத்தார்.

அப்போது சங்கரை மிரட்டிய கும்பல், பெண்ணை ஏமாற்றியதாக பொய் வழக்கில் சிக்க வைப்போம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து யோசித்து பதில் அளிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து வந்துள்ளார். நேராக காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி புகார் அளித்தார். இதையடுத்து மணப்பெண் பூனம், சஞ்சனா, விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகியோரை பண்டா போலீசார் பிடித்து விசாரித்த போது தான் திருமண மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. பூனம் இதுவரை 6 பேரை திருமணம் செய்து பணம், நகையை திருடியதும், ஏழவாதாக சங்கரை ஏமாற்ற முயன்ற போது மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது என்று பண்டா டிஎஸ்பி சிவ்ராஜ் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+