உத்தராகண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்- 144 தடை உத்தரவுடன் விவாதம்!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது சிவில் சட்ட மசோதா மீது உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரகாண் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த குழுவில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருஹன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா தங்வால், சமூக செயற்பாட்டாளர் மனு கவுர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

பொது சிவில் சட்டம் தொடர்பான இந்த குழு முதல்வர் புஷ்கர்சிங் தாமியிடம் இறுதி அறிக்கயை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது சிவில் சட்ட மசோதா தயார் செய்யப்பட்டு மாநில அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனையடுத்து இன்று பொதுசிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார். இந்த பொது சிவில் சட்ட மசோதா மீது உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami tables the Uniform Civil Code Uttarakhand 2024 Bill in State Assembly, in Dehradun. pic.twitter.com/B1LRzfoC09
— ANI (@ANI) February 6, 2024
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் உத்தரகாண்ட் மாநிலத்திலும் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து உத்தரகாண்ட் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications