உத்தரகாண்ட்டில் 19-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் 'இந்திரா அம்மா' மலிவு விலை உணவகங்கள்!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி வரும் 19-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் 'இந்திரா அம்மா' மலிவு விலை உணவகங்களை திறக்க உள்ளது.
தமிழகத்தில் 'அம்மா' உணவகங்களை ஆளும் அ.தி.மு.க. அரசு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த மலிவு விலை உணவகங்களை இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

டெல்லி மாநில அரசும் அம்மா உணவகம் பாணியில் மலிவு விலை உணவகத்தைத் தொடங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதியன்று 'இந்திரா அம்மா மலிவு விலை உணவகத்தை' திறந்தது.
இதனைத் தொடர்ந்து வரும் 19-ந் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் 'இந்திரா அம்மா' மலிவு விலை உணவகங்களைத் திறக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக மாவட்டங்கள் தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டேராடூனில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications