வீடியோ: ஒரு நொடி மிஸ்ஸானாலும் 'உயிர்' உடம்புக்கு சொந்தமில்லை.. பயங்கர வெள்ளத்தை கடக்கும் மக்கள்
டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டேராடூன் அருகே அமலவா ஆற்றில் வெள்ளம் மிகப்பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் கட்டப்பட்டிருந்த தற்காலிக பாலம் உடைந்ததால் ஆபத்தான நிலையில் ஆற்றை மக்கள் கடந்த மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் இமயமலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக உத்தரப்பிரதேசம் , இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் மழை வெளுத்து வருகிறது. கனமழையல் கங்கை மற்றும் அதன் துணைநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாலம் உடைந்தது
டேராடூன் அருகே கங்கையின் துணை நதியான அமலவா ஆற்றில் வெள்ளம் மிகப்பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மக்கள் தவிப்பு
இதனால் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கிறார்கள். இந்நிலையில் பெண்கள் சிலர் கொஞ்சம் மிஸ்ஸானாலும் மரணம் என்கிற நிலையை பொருட்படுத்தாமல் கடும் வெள்ளத்தில் ஆற்றை கடந்துள்ளனர்.
|
வைரலாகும் வீடியோ
ஆற்றின் ஒரு கரையில இருந்து மறு கரைக்கு கம்புகளை பிடித்த பிடி பெணகள் கடக்கிறார்கள். அவர்களுக்கு இளைஞர்கள் கம்புகளை கொடுத்து உதவுகிறார்கள். நல்ல வேளையாக யாரும் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கவில்லை. காப்பாற்றிய இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
போக்குவரத்து பாதிப்பு
இதனிடையே கனமழை காரணமாக இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்தே இன்னமும் மீளாத இந்த மாநிலங்கள் கனமழையால் தவிக்கின்றன. உத்தரகண்ட் மாநிலம் சாமோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் ஆர்பரித்து ஓடுவதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா வானிலை ஆய்வு மையம் அடுத்த இரு நாட்களுக்கு இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications