உத்தரகாண்ட்டில் இறுதி கட்டத்தில் மீட்பு பணி.. தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? வெளியான தகவல்
டேராடூன்: உத்தரகாண்டில் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் மீட்கப்படலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. இதற்காக ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததும், உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
மீட்பு பணியில் இடையூறுகள்: எனினும், மீட்பு பணியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்து. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. தொழிலாளர்களை மீட்கும் பணி 2 வாரத்துக்கு மேலாக நீடித்து வருகிறது. துளையிடும் அமெரிக்க "ஆகர்" எந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள், இடிபாடுகளின் இடையூறுகளால் துளையிடும் பணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்தது.
பிளான் 'பி' நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கிடையில் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது. அதற்காக "எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்" எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்றும் துளையிடும் அனுபவம் வாய்ந்த 6 சுரங்கப்பணியாளர்கள் குகைப்பகுதிக்கு வந்தனர் சுரங்கப்பாதைக்குள் ஆட்களால் துளையிடும் பணியும் தொடங்கியது.
தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்: 17- வது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொழிலாளர்களை மீட்டு கொண்டு வந்த உடன் அவர்களின் உடல் நிலையை பரிசோதிக்க அங்கு தற்காலிக மருத்துவ முகாம்களும் படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதியில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு தயாராக அனைத்து ஏற்பாடுகளும் உள்ளன.
இன்னும் 7 அடி தான்: குழாய் வழியே சுரங்க தொழிலாளர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதனால், எந்த நேரத்திலும் தொழிலாளர்கள் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 மீட்டர் அளவுக்கு தோண்ட வேண்டியுள்ளது. இதனால், சில நிமிடங்கள் தாமதம் ஆவதாக தெரிகிறது. இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆணையத்தின் உறுப்பினர் கூறுகையில், " உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க இன்னும் 7 அடிக்கும் குறைவான தொலைவே பாக்கியுள்ளது" என்றார்.
இதனால், எந்த நேரத்திலும் தொழிலாளர்கள் மீட்கப்பட உள்ளனர். தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்த தேசமும் பிரார்த்தித்து வருகிறது. தொழிலாளர்களைக் காண அவர்களது குடும்பத்தினருடனும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications