For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியில் மருத்துவப் படிப்பு.. பள்ளியில் பகவத் கீதை -உத்தராகண்ட் பாஜக அரசின் புதிய கல்வித்திட்டங்கள்

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தியில் வழங்க வேண்டும் என்பதே தங்களின் அடுத்த திட்டம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உத்தராகண்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதையும் வேதங்களும் போதிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அவர் இன்று தனது அடுத்த திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.

திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை! திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!

இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த தன் சிங் ராவத், "உத்தராகண்ட் மாநில அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்தியில் பாடம் போதிக்கும் திட்டம் உள்ளது. புதிய கல்விக்கொள்கை என்பது இந்திய மொழி கட்டமைப்புகளின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளதோடு மட்டுமல்லாமல், அறிவுறுத்தல்கள், உத்தரவுகள் அனைத்தும் உள்ளூர் மக்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்கிறது.

இந்தி மீடியம்

இந்தி மீடியம்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் கீழ் இந்தியில் மருத்துவக் கல்வியை தொடங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆங்கில வழியில் கல்வி பயின்ற மாணவர்களைபோல் இந்தி வழியில் மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்தி மீடியத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர்.

கட்டாய பிற மொழி மாணவர்கள்

கட்டாய பிற மொழி மாணவர்கள்

இந்தி மீடியத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்களின் விருப்ப மொழியை தேர்வு செய்யும் விசயத்தில் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. அரசாங்கம் இந்தி மீடியத்தில் மருத்துவப் படிப்பை வழங்குவதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறது. 2023-2024 கல்வியாண்டு காலத்திற்குள் இந்தி எம்.பி.பி.எஸ் கோர்ஸ் பயன்பாட்டுக்கு வரும்.

4 கல்லூரிகள்

4 கல்லூரிகள்

இதுகுறித்த பணிகள் மற்றும் திட்டத்தை உத்தராகண்ட் மாநில அரசு உறுதிபடுத்தும். உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் 3 அரசு மாநில மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. டேராடூனில் உள்ள டூன் மருத்துவக் கல்லூரி, ஹல்துவானி அரசு மருத்துவக் கல்லூரி, கார்வலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அதேபோல் ரிசிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தி புத்தகங்கள்

இந்தி புத்தகங்கள்

இந்தியில் மருத்துவம் படிப்பதற்காக புத்தகங்களை தயாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டத்தையும் அவர்கள் உருவாக்குவர்கள். இந்த திட்டத்துடன் மாநில அரசு ஒன்றிவிட்டது. இது மிகவும் சவாலான காரியம் . மத்திய அரசின் மருத்துவத்துறை அறிஞர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எங்களின் முடிவுகள் இருக்கும், நீட் தேர்வில் வெற்றியடைந்து ஆங்கிலம் தெரியாமல் பல மருத்துவ மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் ஆங்கில பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் நிலவி வருகிறது.

தடை வராது

தடை வராது

மருத்துவத்தை இந்தி மயமாக்கும் திட்டத்தால் எந்த தடையும் ஏற்படாது என மருத்துவ அருணா, தேசிய மருத்துவ ஆணைய தலைவர் வனிகர் ஆகியோர் தெரிவித்து இருக்கின்றனர். இது தேசிய மருத்துவ ஆணையத்தின் கொள்கை முடிவு எனக்கூறிய அவர், இதனை நிறைவேற்றும் வகையிலேயே மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுநெறிகளை வெளியிட்டுள்ளது என்றார். 2022-23 கல்வியாண்டிலேயே தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலம் உத்தராகண்ட் என அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்கள்

பாஜக ஆளும் மாநிலங்கள்

பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகியவை உத்தராகண்டின் காலடித் தடத்தை பின்பற்றி புதிய கல்விக்கொள்கையை அமைக்கும் என்றார். அதேபோல் உத்தராகண்ட் அரசு பள்ளிகளில் இந்து சுவர் ஓவியங்களை வரைய வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல் பள்ளிக்கல்வியில் பகவத் கீதை அற்றும் வேதங்கள் இணைக்கபட உள்ளதாக அவர் கூறினார்.

English summary
Uttarkhand Education Minister says MBBS education in Hindi: உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தியில் வழங்க வேண்டும் என்பதே தங்களின் அடுத்த திட்டன் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்து உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X