உத்தரகாண்ட் - டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் : ஆட்சியமைக்கும் பாஜக.. டஃப் கொடுக்கும் காங்கிரஸ்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 37 இடங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது,
உத்தரப்பிரதேசம் மணிப்பூர் கோவா உத்தரகண்ட் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்து எடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கு தேர்தல் தேதிகளை அறிவித்தது.
மொத்தம் அங்கு 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 46.51% வாக்குகளுடன் 56 இடங்களில் வெற்றி பெற்றது.

உத்தரகாண்ட் தேர்தல்
அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 33.49% வாக்குகளுடன் 11 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை பெற்றது. தற்போதைய முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போதும் பாஜகவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாஜகவுக்கே வாய்ப்பு
அதன்படி தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவே மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக டைம்ஸ் நவ் கூறியுள்ளது. இது தனிப் பெரும்பான்மையை விட 2 இடங்கள் கூடுதலாகும்.

31 இடங்களில் காங்கிரஸ்
இதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் மொத்தமுள்ள 70 இடங்களில் 31 இடங்களை பெற்று மீண்டும் பிரதான எதிர்கட்சி வரிசையில் அமரும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 33.49% வாக்குகளுடன் 11 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை பெற்ற நிலையில், தற்போது அக்கட்சி கூடுதலாக 20 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மிக்கு ஏமாற்றம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 1 இடத்தில் மட்டும் வெற்றி பெரும் என கூறப்பட்டுள்ளது. இது அக்கட்சிக்கும் பெரிதும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் இதர கட்சிகள் சுயேட்சை என 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வரான புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications