குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு! தேடுதல் பணிகள் தீவிரம்
காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் சிலர் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என் அஞ்சப்படுவதால், தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு ஓடும் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கம்பீரா - முஜிப்புர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டிருந்தது.

இந்த பகுதியில் இது முக்கியமான பாலம் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். நேற்றும் இப்படித்தான் பலரும் பள்ளிக்கும், வேலைக்கும் சென்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து அற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் சில கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் விழுந்தன. இதில் 3-5 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் முதலில் வெளியாகின.
தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று சொல்லபடுவதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "பாலம் பயங்கர சத்தத்துடன் விரிசல்விட்டது. அடுத்து சில நொடிகளுக்கெல்லாம் பாலம் சடசடவென சரிந்தது. இதில் 2 லாரிகள், ஒரு கார், சில பைக்குகள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தது" என்று கூறியுள்ளனர்.
இந்த விபத்து நடந்தவுடன் பொதுமக்கள் சிலர் ஆற்றில் இறங்கி, உயிருக்கு போராடியவர்களை மீட்டிருக்கின்றனர். ஆனாலும், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாமல் போய் இருக்கிறது. தற்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வந்தன. இருப்பினும் பாலத்தின் உறுதி தன்மையை பராமரிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், எனவேதான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். அதேபோல, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோாருக்கு ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மாநில அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மோர்பி பாலம், இந்த ஆண்டு மஹிசாகர் பாலம் என குஜராத்தில் தொடர்ந்து பாலம் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications