புலிகள் தடை மீதான தீர்ப்பாய வழக்கு: விசாரணையில் பங்கேற்க வைகோவுக்கு அனுமதி!
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மதிமுக பொதுச்செயலர் வைகோ விசாரணையில் பங்கேற்று வாதங்களை முன்வைக்கலாம் என்றும் அதே நேரத்தில் அவரை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 2013ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2 ஆண்டுகள் தடையை 5 ஆண்டுகளாக நீட்டித்துச் சட்டத் திருத்தம் செய்தது.

அதன்படி, இந்த ஆண்டு மே மாதம் புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்கக் கோரி தம்மையும் ஒரு தரப்பாகத் தீர்ப்பாய விசாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் வைகோ மனு தாக்கல் செய்து இருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாய நீதிபதி மிட்டல் முன்பு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. வைகோ தமது கோரிக்கையாக இந்த விசாரணையில் தமது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி வேண்டும். 2010 ஆம் ஆண்டு தீர்ப்பாய விசாரணையில், என்னை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், விசாரணை அமர்வுகளில் பங்கு ஏற்கவும், என் வாதங்களை முன்வைக்கவும் தீர்ப்பாய நீதிபதி அனுமதித்தார்.
மீண்டும் 2012 ஆம் ஆண்டில் தீர்ப்பாய நீதிபதி ஜெயின் முன்பும், அதுபோன்ற மனுவைத் தாக்கல் செய்தேன். அவரும், முந்தைய தீர்ப்பாயம் அனுமதித்ததைப் போல அனுமதியளித்தார். எனவே என்னை இந்த அமர்வில் ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டுகிறேன். அதற்கு வாய்ப்பு இல்லையேல், விசாரணையில் பங்கு ஏற்று என் வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுகிறேன் என்றார்.
இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், விடுதலைப்புலிகளின் அமைப்பில் பொறுப்பாளராகவோ, உறுப்பினராகவோ வைகோ இல்லை. எனவே அவரை ஒரு தரப்பாக ஏற்கக் கூடாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மிட்டல், வைகோவை ஒரு தரப்பாக இந்த விசாரணையில் சேர்க்க முடியாது. ஆனால் அவர் இந்த அமர்வு விசாரணையில் பங்கு ஏற்கவும், வாதங்களை முன்வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. புலிகள் தடை மீதான தீர்ப்பாய விசாரணை செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்தார்.
இவ்வாறு மதிமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications