வாஜ்பாய் எத்தனை நாள் மருத்துவமனையில் இருப்பார்? எய்ம்ஸ் விளக்கம்
வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று பொதுவான மருத்துவ சோதனைக்காக வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications