ஜோலார்பேட்டைக்கு வந்தாச்சு குட்நியூஸ்.. வந்தே பாரத் ஒருபக்கம் + சதாப்தி மறுபக்கம்.. ஆஹா வேற லெவல்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு நல்ல செய்தியை, ரயில்வே அறிவித்துள்ளது.. ஏற்கனவே வந்தே பாரத் செய்தி வலம்வந்தபடியே உள்ள நிலையில், இந்த கூடுதல் தகவலும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தவகையில், அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், வந்தே பாரத் ரயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டன.

அதாவது, இதுவரை பயணிகள் இந்த ரயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது. இப்போது, வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும், மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக, வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகளும் ரயில்வே துறை சார்பில் துரிதமாகியும் வருகிறதாம்..
ஜோலார்பேட்டை: அதன்படி, அரக்கோணம்- ஜோலார் பேட்டை போன்ற நகரங்களை இணைக்கும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக, இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கடந்த மாதமே நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இதுஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு மகிழ்ச்சி அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.. கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலானது, ஜோலார்பேட்டையில் நிறுத்துவதில்லை. முக்கிய வழித்தடமான ஜோலார்பேட்டையில், ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாகவே, தொடர்ந்து வலியுறுத்தபடியே இருந்தனர்.. இதை ரயில்வே வாரியம் தற்போது ஏற்றுள்ளது..
இரட்டிப்பு மகிழ்ச்சி: அதன்படியே, சதாப்தி ரயிலுக்கு, ஜோலார்பேட்டையில் நிறுத்தம் வழங்கியுள்ளது.. வரும் ஜூலை 9ம் தேதி முதல் சதாப்தி ரயில், இரு மார்க்கங்களிலும் தலா ஒரு நிமிடம் நின்று செல்லுமாம்..
இந்த சேவையை, மத்திய இணை அமைச்சர் முருகன், வரும் 9ம் தேதி துவங்கி வைக்க உள்ளார் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.. ஏற்கனவே வந்தே பாரத் ரயில் வரப்போகும் சந்தோஷத்தில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பும் சேர்ந்து கொண்டதால், ஜோலார்பேட்டையே திக்குமுக்காடி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications