மோடி தொகுதியில் இளம்பெண் எரித்துக் கொலை - மூன்று பேர் கைது
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் லல்லாபுரா பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண்ணை மூன்று வாலிபர்கள் வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
12 ஆம் வகுப்பு படித்து வந்த அந்தப் பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து எச்சரித்துள்ளார்.
இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, கடந்த 18 ஆம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேரும் அவரது தாயாரின் கண்ணெதிரிலேயே அந்தப் பெண்ணின் உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அந்தப் பெண் கடும் தீக்காயங்களின் காரணமாக இன்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், இந்த கொடூர சம்பவத்திற்குக் காரணமான மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications