கங்கை நதியில் படகுகள் மூலம் மதனைத் தேடும் போலீசார்!
வாரணாசி: காசியில் சமாதியாகப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவீஸ் மதனை வாரணாசி போலீசார் படகுகள் மூலம் கங்கை நதியில் தேடி வருகின்றனர்.
குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக வலம் வந்தவர் மதன். பாரிவேந்தரின் எஸ்ஆர்எம் குழும கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு பொறுப்பாளராகவும் இருந்தார்.

இவருக்கும் பாரிவேந்தருக்கும் இடையில் மனத்தாங்கல் ஏற்பட்டதால், தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு காசிக்குப் போய்விட்டார். அப்போதிலிருந்து இவரைத் தேடும் பணி தொடர்கிறது.
மதனைத் தேடி அவர் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் காசிக்கு விரைந்துள்ளனர். இன்னொரு பக்கம் வேந்தர் மூவீஸின் சிஇஓவான தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிலரும் காசிக்குச் சென்றுள்ளனர். அங்கு காசி போலீஸ் ஐஜியிடம் விஷயத்தைக் கூற, அவரும் ஒரு தனி போலீஸ் படையை அனுப்பி மதனைத் தேட உத்தரவிட்டுள்ளார்.
5 படகுகள் மூலம் காசி கங்கை நதியில் மதனைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மதன் காசியில் தங்கியிருந்து ஓட்டல் அறையைக் கண்டுபிடித்துள்ளனர். அவரது பைகள் உள்ளிட்ட பொருட்களும் அறையில் இருந்ததை சிவா உறுதி செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications