ராகுல்காந்தி பங்காளி வருண் வேட்புமனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராகுல்காந்தியின் பங்காளி வருண் காந்தி இன்று தனதுவேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ராஜிவ்காந்தியின் சகோதரர் சஞ்சய்காந்தி. இவரது மகன் வருண் காந்தி, காங்கிரசின் பரம எதிரியான பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

Varun Gandhi files nomination in Sultanpur

அக்கட்சி சார்பாக உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட இவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ரோடுஷோ நடத்தி ஆதரவாளர்கள் புடைசூழ அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு சென்றார்.

வருணுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அமிதாசிங்கை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனிடையே இன்று அமேதி தொகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தியை ஆதரித்துஅவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் தன்னை போட்டியிடுமாறு ராகுல் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் தனக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறியதாகவும் பிரியங்கா பேட்டியளித்திருந்த நிலையில் அவரது பிரசாரம் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+