தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் வார்னிங்!
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும் வழங்கினால் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

7ஆம் தேதி போராட்டம்
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

போராட்டம் நடத்தப்படும்
தமிழகத்திற்கு 31 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்று கொள்ள முடியாது என்று ஒன்றுபட்ட கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலம் தழுவிய பந்த்
காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து வரும் 10-ம் தேதி அனைத்து கன்னட அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கூட்டமொன்று நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினார். அந்த கூட்டத்தில் மாநிலம் தழுவிய பந்த் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

போராட்டம் அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் தங்களுக்கு தேவையில்லை என கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கன்னட அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications