For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்துக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை.. பல்டி அடித்த வாட்டாள் நாகராஜ்! #bengaluru

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரில் நாளை பந்த் நடத்த பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தான் பந்த் நடத்த அழைப்பு விடுக்கவில்லை என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் மறுத்துள்ளார்.

நேற்று பெங்களூரில் ஆடித் தீர்த்து விட்ட வெறியாட்டத்தால் தமிழர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக பெரும் பொருள் இழப்பை தமிழர்களுக்கு கன்னட வன்முறையாளர்கள் ஏற்படுத்தி விட்டனர். நகரையே தங்களது வன்முறை வெறியாட்டத்தால் துவம்சம் செய்து விட்டது இந்தக் கும்பல். திட்டமிட்ட வன்முறை வெறியாட்டமாக இது இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Vatal Nagraj says he has not called for bandh tomorrow

இந்த நிலையில் நேற்று விதான் சவுதாவை தனது கட்சியினருடன் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கைதானார் வாட்டாள் நாகராஜ். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் நாளை பெங்களூரில் பந்த் நடத்த பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் பந்த்துக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை என்று வாட்டாள் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாட்டாள் கூறுகையில், நான் பந்த் நடத்த அழைப்பு விடுக்கவில்லை. செப்டம்பர் 15ம் தேதி ரயில் மறியல் செய்ய மட்டுமே அழைப்பு விடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தாலும் கூட இன்றே பெங்களூரில் பந்த் போலத்தான் காணப்படுகிறது. ஒரு கடையும் திறக்கப்படவில்லை. பஸ்கள் ஓடவில்லை. மக்கள் பெரும் பீதியுடன்தான் உள்ளனர். தமிழர்கள் வெளியில் வரவே அஞ்சும் நிலைதான் தொடர்கிறது.

English summary
Kannada activist, Vatal Nagraj has clarified that he has not called for a bandh tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X