தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால், தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம்: வாட்டாள் மிரட்டல்
Recommended Video

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், கன்னட அமைப்பான கன்னட சலுவளி வாட்டாள் என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:
ஏப்ரல் 16ம் தேதிக்குள் தமிழகத்தில் காவிரி தொடர்பான போராட்டங்களை நிறுத்த வேண்டும். ஏப்ரல் 16க்கு பிறகும் போராட்டம் தொடர்ந்தால் 16ம் தேதிக்கு பிறகு, தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடிகர்கள், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு எதிராக கருத்து கூறியுள்ளதால் அவர்கள் படங்களை கர்நாடகாவில், வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இப்போது தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்துவதாக கூறியுள்ளார்.
இதனால், கர்நாடக வாழ் தமிழர்களிடையே பரபரப்பு சூழல் நிலவுகிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications