ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இம்மாதமே தீர்ப்பு?
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன. இதனால் தீர்ப்பு இந்த மாதத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, கீழ்நீதிமன்ற தண்டனையை உறுதி செய்ய வலியுறுத்தி கர்நாடகா மற்றும் திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பினாகி கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

முதலில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் தரப்பு வாதங்களும், பின்னர் கர்நாடக தரப்பில் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வாதங்களும் முன் வைக்கப்பட்டன. மே 12ம் தேதி நடந்த விசாரணையின் போது, ஜூன் 1ம் தேதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து நேற்று காலை ஆச்சார்யாவும், பிற்பகலில் வருமான வரித்துறையினர் சார்பிலும் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சுப்ரமணியசாமியின் எழுத்துபூர்வமான வாதமும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க நிறுவனங்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணை முடிந்ததும் அன்றைய தினமே தீர்ப்பு தேதி வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications